Monday, January 24, 2011

சேரர் கொங்க தேச ஜல்லிக்கட்டுகள்

வையாபுரி நாடு,கலயமுத்தூர் காணி,
நெய்காரப்பட்டி ஜல்லிக்கட்டு:
https://kongupattakarars.blogspot.com/2011/03/7.html?m=1
வாழவந்தி நாடு,இணை நாடு தூசூர் நாடு,நாமக்கல் அருகே அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு:
https://kongupattakarars.blogspot.com/2011/03/10.html?m=1
வாழவந்தி நாடு,இணை நாடு தூசூர் நாடு,நாமக்கல் அருகே பொட்டிரெட்டிபட்டி ஜல்லிக்கட்டு:
வாழவந்தி நாடு,இணை நாடு தூசூர் நாடு,நாமக்கல் அருகே தேவராயபுரம் ஜல்லிக்கட்டு:
https://kongupattakarars.blogspot.com/2011/03/10.html?m=1

பாரம்பரிய கோயில் மத விழாக்களான இவற்றை அழிக்க போட்டியாக ஈரோடு,கோவை,திருப்பூர் அலகுமலையில் மதச்சார்பற்ற புதிய புற்றீசல் ஜல்லிக்கட்டுகளும்,
திண்டுக்கல் பகுதியில் கத்தோலிக,ஃபோர்ட் பௌண்டேஷன் ஆதரவு கிறிஸ்தவ போலி ஜல்லிக்கட்டுகளும் கிளம்பியுள்ளன. http://kongureligion.blogspot.com/2013/05/blog-post.html?m=1

ஃபோர்ட் பௌண்டேஷனின் அடியாள் ஆஸ்திரியாகாரி இல்ஸே கோலர் என்பவளது ஏஜன்டான கத்தோலிக திமுக ஜல்லிக்கட்டு போராட்ட துரோகி நாலாங்கிளாஸ் கார்த்திகேயாவின் பொய் பிரச்சாரம்:
https://tamil.thehindu.com/bbc-tamil/article26296835.ece?fbclid=IwAR1j7X4ebcFfaPXUqxvyJ4WosOi0zhytT1l0Sa5K32e_HYVWa3w_uckqWpM

ஜல்லிக்கட்டின் உண்மைகள்:
https://tamilnaducattle.blogspot.com/2013/10/speech-for-urban-audience-at-iyal.html

Sunday, January 23, 2011

கொங்கமாடில்லாதவன் கொங்கனேயல்ல! (நாட்டுப்பசுவினங்கள் ஏன் சிறந்தவை? கொங்கதேசத்துக்குச் சிறந்த இனம் எது?)


         கொங்கமாடு
(காங்கயம்,திருச்செங்கோடு)
   மலையன் 
(பர்கூர், ஆலாம்பாடி, பிற மலை மாடுகள்)
      பிற பாரதப்பசுவினங்கள்      (கிர், தார்பார்க்கர், சாஹிவால், ரெட் சிந்தி, ஓங்கோல் போன்றவை)
  சீமைக்கறவை
(சிந்தி – ஜெர்சி கலப்பு, ஜெர்சி, HF – ஹால்ஸ்டீன் ப்ரீஸியன் போன்றவை
  1. காளைக்கன்று, கிடாரிக்கன்று இரண்டுக்கும் மதிப்பு உண்டு. (இரண்டு வருட காளைக்கன்று ரூ. 25,000). பத்து கன்றுகளுக்கு மேல் ஈனும். வருடமொரு கன்று ஈனும் - regular annual breeder.
காளைக்கன்று, கிடாரிக்கன்று இரண்டுக்கும் மதிப்பு உண்டு. (இரண்டு வருட காளைக்கன்று ரூ. 7,000). பத்து கன்றுகளுக்கு மேல் ஈனும். வருடமொன்று ஈனாது.
ஓங்கோலைத்தவிர பிற இனங்களின் காளைக்கன்றுகள் சுட்டிப்பாக இருக்காது. ஆதலால் உள்ளூரில் விலை போவது சிரமம். பத்து கன்றுகளுக்கு மேல் ஈனும். வருடமொன்றில்லை Irregular breeder.
காளைக்கன்று அடிமாட்டுக்கே செல்கிறது (இரண்டு வருட காளைக்கன்று ரூ. 4000). ஐந்து கன்றுகள் ஈனுவதே சிரமம். அதிலும் பாதிக்கு மேல் காளைக்கன்றுகள். Regular if cared
  1. கட்டிப்போட்டு வரத்தீனி மட்டுமே கூடப் போடலாம் (stall feeding). பனை ஓலை, வாழைப்பட்டை, கழுநீர்  ஆகியவற்றைக்கூட உண்டு வாழும். பஞ்சம் தாங்கி பிறகு செழிப்பில் ஊறிக்கொள்ளும். மாட்டுத்தீவனம் தேவையில்லை.
இவற்றுக்கு மேய்ச்சல் அவசியம். குறைந்த அளவே உண்ணும்.  மாட்டுத்தீவனம் தேவையில்லை. கொங்கனுக்கு பாதி உண்ணும்.
இவற்றுக்கு மேய்ச்சல் அவசியம். கொங்கமாட்டைவிட மூன்று மடங்கு தீனி அதிகம்.
மேய்ச்சல் அவசியம், பச்சைத்தீனி கட்டாயம், பஞ்சத்தில் ஒருமுறை அடிபட்டால் செழிப்பில் தேறாது. கொங்கனை விட ஐந்து மடங்கு தீனி உண்ணும்.
  1. வெயில், மழை ஆகியவற்றை விரும்பும். வெட்டவெளியும், மரநிழலையுமே விரும்பும்.
கடும் வெயிலுக்குத் தாங்காது. மரநிழலே போதும்.
.ஓங்கோல் தவிர தென்னாட்டின் ஈரக்காற்றைத் தாங்குவது கடினம்.
வெயில் எதிரி, மழையில் ஊறல் வரும். ஆஸ்பத்திரி போன்ற சுழ்நில்லை வேண்டும்
  1. நோய் தாக்குதலே இருக்காது. பெரும்பாலும் சுழி சுத்தம்.
நோய் தாக்குதலே இருக்காது. சுழி சுத்தம் பார்க்காததால், சுத்தமிருக்காது.
தென்னாட்டின் நோய்கள் சற்று அதிகமாகவே பாதிக்கும். சுழி சுத்தமிருக்காது.
சுத்தமாக நாட்டுநோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லை. நோய்க்குச் செலவாகும் தொகை மிக அதிகம். 
  1. உழைக்கவும், குடும்பத்தேவைக்கான பாலுக்கும் உருவான இனம்.
ஒரு ஜோடி எட்டு டன் எடையை பத்து கிலோமீட்டர் வரை தொடர்ந்து இழுத்துச்செல்ல வல்லது.
வண்டி இழுக்கும் வயது: 12 ஆண்டுகள் வரை
சவாரி வண்டிகளுக்கும், நெய் உற்பத்திக்கும் உருவான இனம்.
ஒற்றை மாட்டு சவாரி வண்டிக்கானது.
வண்டி இழுக்கும் வயது: 8 ஆண்டுகள் வரை
பிரதானமாக பால் வியாபாரத்துக்கு மட்டுமே பயன்படும் இனம்.
ஓங்கோல் ஜோடி 8 டன் வரை 6 கி.மி இழுக்கும்.
வண்டி இழுக்கும் வயது: 8 – 10 ஆண்டுகள் வரை
140 ரூபாய்க்கு அதிகபட்சம் பால்விற்று, 180 ரூபாய் வரை அன்றாடம் செலவு வைத்து, தீவன கம்பெனிகள், டாக்டர்கள், பால் பண்ணைகள் ஆகியவற்றை வாழ வைக்கும் இனம். மாட்டுப் பண்ணையாளனுக்கு நஷ்டம் நஷ்டமே. நிற்கவே யோசிக்கும் காளைகள் வண்டி புட்டினாலே மயங்கிவிடும். கறிக்காக உண்டாக்கப்பட்ட இனம். மாட்டுக்கறி உண்பதால் கேன்சர் உள்ளிட்ட பல நோய்கள் தாக்குகின்றன.
  1.  பாலில் தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன். HDL என்ற நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால் நோய்கள் வராமல் காக்கிறது. A2 வகைப்பால் என்று விரும்பி வாங்கப்படுகிறது. இவ்வகைப் பால் பல பெருநோய்களைத் தடுக்கிறது. கேன்சர், இதய நோய், சக்கரை, மூளை நோய்கள், மன நோய்கள், ப்ரசர் உள்ளிட்ட பல நோய்கள் தீரும் என்பது கீழ்கண்ட ஏ1 ஆய்வு அட்டவணை மூலம் அறியலாம். சீமை மாட்டுப்பாலில் உள்ள மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் இதில் இல்லை. ஒரு ஆய்வு:

  2. 30,000க்கும் மேற்பட்ட மாடுகள் வெளிநாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
     http://en.wikipedia.org/wiki/A2_milk

    ஏ2 பால் பொருட்கள்

    பாலில் தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன். HDL என்ற நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால் நோய்கள் வராமல் காக்கிறது. கால்சியம் சற்று குறைவு.
    சீமை மாட்டுப்பாலில் உள்ள மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் இதில் இல்லை.
    பாலில் தேவையான சத்துக்கள் அனைத்தும் உள்ளன். HDL என்ற நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளதால் நோய்கள் வராமல் காக்கிறது. அதிகம் கறப்பதால் சத்து சற்று குறைவு. A2 வகைப்பால் என்று விரும்பி வாங்கப்படுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட மாடுகள் வெளிநாடுகளில் வளர்க்கப்படுகின்றன.
    சீமை மாட்டுப்பாலில் உள்ள மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் இதில் இல்லை.
    பாலில் சத்துக்கள் குறைவு. LDL என்ற தீய கொழுப்பு மட்டுமே உள்ளதால் A1 என்ற இரண்டாம்தர பால் என ஐரோப்பிய – அமேரிக்கர்களே ஒதுக்குகின்றனர். நல்ல நாட்டுமாடுகளை எடுத்துக்கொண்டு ஊத்தையான சீமைக்கறவையை நமது தேசதுரோகி சர்க்காரிடம் கொடுத்து விற்கின்றனர். மார்பின் (அபின்) மன அழுத்தி போதைப்பொருள் உள்ளது.
    1. இதன் சாணம், மூத்திரம், பால், தயிர், மோர், நெய் ஆகியவை தனித்தனியாகவும், ஒன்றாக பஞ்சகவ்யமாகவும் எய்ட்ஸ், புற்றுநோய் முதலிய நோய்களுக்கும் மருந்தாகிறது. கொங்கர்கள் உடல்வாகிற்குப் பழக்கப்பட்டது.
    இதன் சாணம், மூத்திரம், பால், தயிர், மோர், நெய் ஆகியவை தனித்தனியாகவும், ஒன்றாக பஞ்சகவ்யமாகவும் எய்ட்ஸ், புற்றுநோய் முதலிய நோய்களுக்கும் மருந்தாகிறது.
    இதன் சாணம், மூத்திரம், பால், தயிர், மோர், நெய் ஆகியவை தனித்தனியாகவும், ஒன்றாக பஞ்சகவ்யமாகவும் எய்ட்ஸ், புற்றுநோய் முதலிய நோய்களுக்கும் மருந்தாகிறது.
    இதன் சாணத்தில் நுண்ணுயிர்கள் இல்லை. மூத்திரத்தில் தன்மை இல்லை. பல நோய்கள் வர இதன் தயிர், மோர், நெய் ஆகியவை காரணமாக உள்ளன என்பது அறிவியல்.
    1. கொங்கதேசத்தில் கொங்கமாடு கோ இருப்பதாலேயே கோ+இல்=கோயில். கொங்கன் இல்லாத கொங்க ஸ்தலம் கோயில் அல்ல. விபூதி, பஞ்சகவ்யம். கோமூத்திரம், சாணம், நெய், தயிர், பால் ஆகியவை கோயில்களில் வளர்க்கப்படும் மாடுகளிலேயே பெறப்படவேண்டும். இப்பொருட்களை உற்பத்தி செய்வதில் நமது சாவடிப்பாளையம் கோ சேவா சங்கம் - உலகின் மிகப்பெரிய கொங்க மாடு அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி மையம் மற்றும் முத்தூர் முத்துசாமி போன்றோர் செய்கின்றனர். மேலும் ஈரோட்டில் பிரத்யேக பசுப்பொருட்கள் கடை அமைத்தும் வியாபாரம் செய்து பசுக்களை ரட்சிக்கின்றனர். இலவச த்யாரிப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. நாட்டுமாட்டு பசுஞ்சாண விபூதி, அர்க்கம், பஞ்சகவ்ய கிருதம், மூலிகை பினாயில்

     விலாசம்

    அடிமாட்டுக்கு  சென்ற நல்ல கொங்க  பசுக்களை மீட்டு வழங்கும் அதே விலைக்கு ஸ்தாபனம்:

    கொங்க கோசாலை,
    9 வல்லக்காடு, 
    வாய்க்கால்மேடு,
    ஆண்டிப்புதூர் ,
    காடையூர்,
    காங்கயம் தாலுகா,
    திருப்பூர் ஜில்லா.
     கோசாலை ஹாட்லைன்: 93608 30039

                  அதி உன்னத ப்ரத்யேக தயாரிப்பாளர்கள்:

    சேலம் சுரபி கோசாலை (தலைமை பயிற்சி மையம்):






















    விலாசம்:
    சுவாமி ஆத்மானந்தா,
    சுரபி கோசாலை,
    ஸ்ரீ நகரம்,
     ராஜராஜேஸ்வரி பீடம்,
    நாமமலை அடிவாரம்,
    ஆத்தூர் ரோடு,
    தெற்கு அம்மாபேட்டை
    http://www.kapilasurabhigohshala.com/Product_New.aspx
    செல்: 94432 29061

    கோடீஸ் கோசாலை:
    முத்தூர்: முத்துசாமி
    மேட்டுக்கடை,
    முத்தூர்,
    காங்கயம் தாலுகா,
    திருப்பூர் ஜில்லா.
    செல்: 9965929098
    Email: kovarshiniproducts@gmail.com

    ஸ்ரீ ரங்கா கோசாலை:
    சோமசுந்தரம்,
    336, சிந்தகவுண்டன்பாளையம்,
    ஆப்பக்கூடல் - அந்தியூர் ரோடு,
    சக்தி நகர் போஸ்ட்,
    அந்தியூர்

    செல்: 9442931794

    கோவையில் கிடைக்குமிடம்:
    வழக்குரைஞர் லக்ஷ்மண நாராயணன்,
    கோர்ட் வளாகம் அருகில்,
    கோவை

    செல்: 93631 01097


                 கோசாலை: கோ சேவா சங்கம் கோசாலை, 

    சாவடிப்பாளையம்,

    ஈரோடு - கரூர் ரோடு,

    மொடக்குறிச்சி பஞ்சாயத்து,

    ஈரோடு ஜில்லா.
    போன்: 98430 35554



    கடை: ஸ்ரீ பஞ்சகவ்ய ஔஷதாலயம்,

    முத்து காம்ப்ளக்ஸ்,

    458, சத்தியமங்கலம் ரோடு

     (எல்லைமாரியம்மன் கோயில் அருகில்),

    ஈரோடு.

    போன்: 98430 35554

    நந்தகோகுலம் கோசாலை,
    கிருஷ்ணன் வீதி,
    கோபிசெட்டிபாளையம்,
    ஈரோடு ஜில்லா .

    போன்: 98427 82133,
    98431 92612,
    93675 25755.











    பஞ்சகவ்ய மருந்துகள்:










                                  

    மலைப்பகுதிகளில் அவ்வப்பகுதிப் பசுக்களை இன்னும் கோயிலுக்கு விடுவதனைக் காணலாம்.
    இவை இயற்கையாக வாழும் பிரதேசங்களில் இவை “கோ”. ஆனால் பிற பிரதேசங்களில் பரதேச கோ. கொமாதாவை கடத்திக்கொண்டு வரும் பாவம் மிகப்பொல்லாதது.
    திமில் இல்லாத இவ்வினம் “கோ” ஆகாது. இது உள்ள இடத்தில் நோய் நொடிகளே இருப்பதால் நல்லதல்ல.
    1. கொங்க மண்ணில் உள்ள 33 கோடி நன்மை செய்யும் நுண்ணுயிரிகள் (rhizobium, acetobacter, blue green algae, fungi முதலானவை) இதன் வயிற்றில் இருந்து மட்டுமே பெறலாம்.
    மலை மண்ணின் நுண்ணுயிரிகள் மட்டுமே உள்ளன.
    பாலைவனத்தின் குறைந்த நுண்ணியிரிகள் மட்டுமே உள்ளன.
    விரல்விட்டு எண்ணக்கூடிய அளவே நுண்ணுயிரிகள் உள்ளன.
    1. மரபணு acrocentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும் (இடைவெட்டு என்ற கலப்படங்கள்). பிற நாட்டுமாடுகளுடன் கலப்படம் செய்தால் தன்மை குன்றி காளைகள் பளு இழுக்காததுடன், பாலும் குறையும்.
    மரபணு acrocentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்). பிற நாட்டுமாடுகளுடன் கலப்படம் செய்தால் தன்மை குன்றி காளைகள் பளு இழுக்காததுடன், பாலும் குறையும்.
    மரபணு acrocentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்).
    மரபணு metacentric ஆதலால் பிற இனங்களோடு சேர்த்தால் வம்சாவளி மலடாகும். (இடைவெட்டு என்ற கலப்படங்கள்). இதனுள் நாட்டுமாட்டு விந்து செலுத்தி வரும் கன்றினமான சிந்தி – ஜெர்ஸி கிராஸ் தோல்வியடைந்துள்ளது. எனவே கலப்படம் தோல்வியுறும்.
    1. BMR குறைவு ஆதலால் குறைந்த அளவே உணவிலும் நிறைவு உண்டு.
    BMR குறைவு ஆதலால் குறைந்த அளவே உணவிலும் நிறைவு உண்டு.
    BMR குறைவு ஆதலால் குறைந்த அளவே உணவிலும் நிறைவு உண்டு.
    Basal Metabolic Rate அதிகமாதலால் குறைவாக உண்டால் உடல்நிலை மோசமாகி இறந்துபோகும்.
    12. கொங்கர்களுடன் ஆதியில் கங்கைக்கரையிலிருந்து வந்த ஒரே உயிரினம். இன்னும் "கங்கநாடு" அல்லது "கொங்கமாடு"   என்று அழைக்கப்படுகிறது. கொங்கர் தம் கலாசாரம், வாழ்வியல், மண்ணோடு பிண்ணிப்பிணைந்தது.

    சங்க காலக் கொங்கு நாணயங்கள் புத்தகத்திலிருந்து கொங்க மாடு பொறித்த சேரர் காசுகள் - கரூர் அமராவதித் துறையிலிருந்து எடுக்கப்பட்டவை (காலம்: கி.மு. முதல் நூற்றாண்டு)

    படங்கள்: இரண்டாயிரத்து இருநூறு வருடப்பழமை வாய்ந்த கொங்க மாட்டின் பொம்மை, பொருந்தல், பழனி பகுதி.
    http://www.frontlineonnet.com/fl2720/stories/20101008272006400.htm

    வெள்ளையன் சங்க கால "கொங்கர் ஆ" எனும் இவ்வினத்தை ஒரு குடும்பச்சொத்தாக்கி, "காங்கயம்" என்று பெயரிட துணை போனான். 
    "கொங்கமாடு" என்பது தமிழிலும், "கங்கநாடு" என்று கன்னடத்திலும் 
    அழைக்கப்படுகிறது. 

    கொங்க மாடினத்தில் காங்கய நாட்டின் மாடுகள் என்பன ஓர் உப இனமே என்பதற்கான ஆய்வு. கொங்கவுக்கும் காங்கயத்துக்கும் இருக்கும் வேறுபாடுகள் மிகச்சிறிய அளவே. நாமக்கல் வெட்நரி யுனிவர்ஸிடியினரால் வெளியிடப்பட்ட புத்தகத்திலிருந்து;


    பழையகோட்டை பட்டக்காரர் வெப்ஸைட்டில்: http://kangayambull.org/the-breed/
    மேற்கிந்திய இனங்களிலிருந்து மரபணு தூரம் (Genetic distance) அதிகம். ஹரியானா என்ற இனம் கங்கை சமவெளியில் இருப்பினும், யமுனைக்கு மேற்கிலுள்ளதாகும். ஆனால் தார் பார்க்கர் இனமோ, பிற மேற்கிந்திய இனங்களினின்று வேறுபட்டது. ஏனெனில் இவ்வினம் மதுரா பகுதியினின்று யாதவ இனத்தவரால் துவாரகைக்கு எடுத்துச் செல்லப்பட்டது என்று தார் பார்க்கர் இனவிருத்தி செய்துவரும் பத்மேடா என்ற உலகின் மிகப்பெரிய கோசாலையினரால் தெரிவிக்கப்படுகிறது. உண்மை இவ்வாறு இருப்பினும், மிக வேறுபட்ட காங்க்ரேஜ் என்ற மேற்கிந்திய இனத்திலிருந்து வந்தவை என கிறித்தவ ட்ரெவிடியனிஸ கூலிப்படைகள், சில மாடுகளை விலைக்கு வாங்கி போலி ஆராய்ச்சி  மையமொன்றை அமைத்துத் தூக்கிப்பிடிக்கின்றன. கொங்க-கங்க மாடுகள் கோசலத்தினின்று, அதாவது கங்கை சமவெளியினவையேயொழிய, சிந்து-சரஸ்வதி பகுதியனவை அல்ல என்பதற்கான சான்று:

     சோழி்ய மாடு - கோனாடன் (மணப்பாறை), பாண்டி மாடு (புலிகுளம்) ஆகிய இவ்வினங்களுடனும், கங்கைச்சமவெளி இனங்களுடன் தொடர்புடையது. 
    கொங்க-கங்க மாடுகளுக்கு மேலும் நெருக்கமான கங்கை சமவெளி கொசல தேச (ஔத்) பகுதி மாடுகளது உருவ ஒற்றுமையே இதற்கு மேலும் ஒரு சான்றாகும். கொங்கர்களை "கோசர்" என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுவதனை ஒப்பு நோக்கவும். ஹரியானா, தார் பார்க்கர் இனங்களுக்கு மிக்க நெருங்கியதாகும். கீழுள்ள மூன்று  போட்டோக்களையும் ஒப்பு நோக்குக.


     ஓர் கோசல தேசத்து (உத்திர பிரதேச) மாட்டு வண்டி மற்றும் பசு

    இரு கொங்க எருதுகள்

    கண்ணபுரம், அந்தியூர் குருநாதசாமி, அத்திக்கோம்பை ஆகிய தேர்களில் அக்குடும்பத்தினர் வெள்ளையர் தூண்டுதலால் கொங்கர் அல்லாதோர்க்கும் எருதுகளை நாடு எல்லை தாண்டி விற்றனர். காங்கயம் அருகே கண்ணபுரம் இருந்ததால், இதனை வாங்கும் பிற பகுதிஇனர், இதனை "காங்கயத்து மாடுகள்" என்ற பிரச்சாரத்தை மேலும் பரப்பினர். இச்சந்தைகள் துவங்கி 150 வருடங்களுக்குள்தான் நடந்துவருகின்றன என்பதனை கோயில் நிர்வாகம் வெளியிடும் அறிவிக்கைகளிலேயே அறியலாம். கண்ணபுரம் ஊர் அமைந்தே 700 வருடங்கள்தான் ஆகின்றன என கன்னிவாடி கன்னகுலப் பட்டயம் தெரிவிக்கிறது. கிறுத்தவ ட்ரெவீடியனிஸ விஷமிகள் இச்சந்தை ஆயிரத்து ஐநூறு வருட பழமை உடையது எனக்கூறுதலில் உள்ள பொய்யினை கீழ்கண்ட பட்டயம் உணர்த்தும்:

    மாட்டினை கொங்கர் காசுக்கு விகும் வழக்கம் வெள்ளையர்க்காரர்கள் துவக்கியது.
      லிங்காயத்துகளுடன் கர்னாடகத்திலிருந்து வந்த உயிரினம். கலாசாரம், வாழ்வியல், மண்ணோடு பிண்ணிப்பிணைந்தது.
      சாஹிவால், தார் பார்க்கர், ரெட் சிந்தி ஆகியவை பாகிஸ்தானின் பாலைவன இனங்கள். அப்பகுதிகள் பாலைவனமாகவே உள்ளன. ஓங்கோல் கரையோர ஆந்திரத்தின் இனம்.
      இவ்வினங்கள் முறையே ஜெர்மானிய ஷெல்ஸ்விக் – ஹோல்ஸ்டீன் தீபகற்பம் மற்றும் ப்ரீஸியன் தீவுகள், இங்கிலாந்து ஜெர்ஸி தீவு ஆகிய பகுதியின் இனங்கள். அப்பகுதி மட்டுமே இவற்றிற்கானது.

      இன்னும் சீமைக்கறவைகள், பிற நாட்டு இனங்கள், இனங்களைக் கலப்படம் செய்வதில் ஆர்வமுள்ளதா கொங்கர்களே? வியாபாரிகள், துரோகி சர்க்கார் ஆகியவற்றைக் கேட்டு உங்கள் உயிரினும் மேலான கொங்கமாட்டை தூக்கி எறியலாமா? நமது கொங்கமண்ணை 10,000 ஆண்டுகளாக வளப்படுத்தி, உழைத்து நம்ம வாழவைத்த இவ்வினத்தை புறக்கணித்ததாலேயே இன்று கொங்க வேளாண்மை குறைந்து கொங்க வெள்ளாளன் இன்னிலையில் உள்ளான். சிந்திப்பீர்.
      “மாடு இல்லாதவன் செல்வந்தனல்ல. கொங்கமாடில்லாதவன் கொங்கனுமல்ல”

      பொன் தீபங்கர் 
      கொங்கதேச சரித்திர கலாசார   கேந்திரம்
      +91-94442353708

      Tuesday, January 18, 2011

      பசு பராமரிப்பின் மான்மீயம்

      மனிதப்பிறவியைப் போலவே பசுமாட்டின் பிறவியும் மிகப்பெரும் தவப்பயனால்தான் கிடைக்கிறது, 

      காவோ வை ஸர்வா தேவதா: 

       என்பதாக பசுவின் உடலில் வால் நுனியிலிருந்து கால் குளம்பிலிருந்து கொம்பின் நுனிப்பகுதி வரை ஒவ்வொரு அங்கத்திலும் ஒவ்வொரு தெய்வம் வாஸம் செய்வதாக நமது சாஸ்திரம் தெரிவிக்கிறது,

      கோ ப்ராஹ்மணேப்ய: ஸுபமஸ்து நித்யம் 

      பசுவுக்கும் வேதம் கற்ற அந்தணர்களுக்கும் எப்போதும் மங்களம் உண்டாகட்டும் என்று ப்ரார்த்தனை செய்கிறோம், கோ ப்ராஹ்மண ஹிதர் (பசுவுக்கு நன்மையைச் செய்பவர்) என்றும் கோபாலர் கோவிந்தர் (பசுவை பாதுகாப்பவர்), என்றும் ஸ்ரீ கிருஷ்ணரை அழைக்கிறோம்.

      ஸ்ரீ கிருஷ்ணர் பாலலீலை செய்த இடம் கோகுலம் என்று அழைக்கப்படுகிறது,
      பசுவை பராமரிக்கும் (யாதவ) குலத்தில்தான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தார். கோ வை பராமரிக்கும் குலத்தில் பிறந்த கோபிகளே ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவர்கள் ஆனார்கள்.

      பசுமாடு நமக்கு பால் (தயிர் நெய்) தந்து உதவுகிறது, பசுவின் சாணமும் மூத்திரமும் அனைத்தையும் சுத்திசெய்யும் தன்மை வாய்ந்தது, ஆகவேதான் பசுவின் பால் தயிர் கோமயம் கோமூத்திரம் நெய் ஆகியவற்றைக்கொண்டு பஞ்சகவ்யம் என தயார் செய்கிறோம், பஞ்சகவ்யமானது அதைச் சாப்பிடுபவரின் உடல் தோல், மாம்ஸம், ரத்தம், மற்றும் எலும்புப் பகுதி வரை உள்ள பாபங்களை (அக்னி விறகுக் கட்டையை எரிப்பது போல்) எரித்து விடுகிறது என்கிறது சாஸ்திரம். (கலியுக தர்ம சாஸ்திரமான  பராசர ச்மிரிதி )

      கோமூத்திரத்தை சிறிது தலையில் தெளித்துக் கொள்வதே கங்கா ஸ்நானம் செய்த பலன், பசுவை ஒரு முறை ப்ரதக்ஷிணம் செய்வதால் பூ (உலகம் முழுவதும்) பிரதக்ஷிணம் செய்த புண்யம், பசுவை பூஜித்தால் ப்ருஹ்மா விஷ்ணு ருத்ரர் முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜை செய்த புண்யம்,
      கோக்ராஸம் (பசுவிற்கு புல் கொடுத்தல்), கோகண்டூயனம் (பசுவிற்கு கழுத்துப் பகுதியில் சொறிந்து கொடுத்தல்) மஹா பாபத்தையும் போக்கடிக்கும்,

      பசுக்கள் மேய்ந்துவிட்டு வீடு திரும்பும் ஸந்த்யாகாலம் மிக பவித்ரமான கோதூளி காலம் (லக்னம்) எனப்படுகிறது, பசு நடக்கும் போது எழும் புழுதி மேலே படுவது எட்டுவகை ஸ்னானங்களில் ஒன்றாகும், மா என்று கத்தும் பசுமாட்டின் சப்தம் அந்தப்பகுதிக்கு மங்களத்தைத் தருகிறது என்கிறது வேதம்,
      கவாம் கோஷ்டே தகுணம் என்பதாக பசுமாட்டின் அருகில் பசுவஸிக்குமிடத்தில் அமர்ந்து செய்யும் மந்திரஜபம் மற்றும் தர்ம கார்யங்களுக்கு நூறு பங்கு பலன் .

      மனிதனின் கண்களுக்குப் புலப்படாத ம்ருத்யு , யமன், யம தூதர்கள், பசு மாட்டின் கண்களுக்கு மட்டும் தெரிவார்கள், ஆகவே தான் ஒருவர் இறக்கும் போது பசுமாடு சத்தம் போடுகிறது,

      பர (யம) லோகத்துக்கு (யம) தூதர்களால் அழைத்துச் செல்லப்படும் ஜீவன், அஸிபத்ர வனத்தில் வெந்நீர் ஓடும் வைதரணீ என்னும் நதியைத் தாண்ட முடியாமல் தவிக்கும் போது (தானம் செய்யப்படும்) பசுமாடு வந்து உதவுகிறது, அதன் வாலைப்பிடித்துக் கொண்டு ஜீவன் வைதரணீ நதியைக் கடக்கிறான் என்கிறது கருட புராணம்,

      இன்னும் ஒரு சில ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு (நாகரீக வளர்ச்சியால்) ஏற்படும் சில இயற்கை மாறுதலால் உலகம் முழுவதும் சில விபரீதங்கள் ஏற்படும்போது பசுக்கள் இருக்குமிடம் மட்டும் எந்த ஒரு பாதிப்புமில்லாமல் பாதுகாப்பாக இருக்கும் என்று ஹரேராமா ஹரே கிருஷ்ணா இயக்கம் வெளியிட்டுள்ள ஓர்ஆராய்ச்சிக் கட்டுரை தெரிவிக்கிறது,

      ஆகவேதான் பசுக்களின் பெருமைகளை நன்கு புரிந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலும் பசுமாட்டை வளர்த்து பாதுகாத்து வந்தார்கள், தற்சமயமும் பலர் ஆங்காங்கே கோசாலைகள் நிறுவி மொத்தமாக பசுவைப் பாதுகாக்கிறார்கள், முறையாக பராமரிக்கவும் செய்கிறார்கள்,.

      ஆனால் வேறு சிலர் பசுவின் பெருமையை மஹிமையை அறியாமல் (கறவையற்ற)பசுக்களை வெளி மாநிலத்துக்குக் கொண்டு சென்று துன்புறுத்துகிறார்கள் வதைக்கவும் செய்கிறார்கள் என்று கேள்விப்படுகிறோம், இது மிகவும் வருந்தத்தக்கது,

      கோஹத்தி மிகப்பெரும் மஹாபாபம், அதைச்செய்வபருக்கு தனியான நரகம் உண்டு, பசுவின் பெருமைகளை உணர்த்தி, பசு துன்புறுத்தப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்,

      தற்சமயம் ஒரு சிலர் பசுவை (துன்புறுத்த) அழைத்துச்செல்வதை தடுத்து நிறுத்தி ஓரிடத்தில் வைத்து (ப்ரதி ப்ரயோஜனம் எதிர்பாராமல்) பாதுகாத்து வருகிறார்கள், பசுவை பாதுகாப்பது மிகப்பெரும் புண்யம், தர்மம், அது குடும்பத்தையே தேசத்தையே பாதுகாக்கும், இவர்களுக்கு ஆதரவு தந்து உதவ வேண்டும்,

      பசுக்கள் பாதுகாக்கப்படும் கோசாலைகளுக்குசென்று பசுக்களை பூஜை செய்து ப்ரதக்ஷிணம் நமஸ்காரம் செய்வதுடன், பசு இருக்குமிடத்தை சுத்தப்படுத்துதல் பசுவுக்கு சொறிந்து தந்து புல்தந்து சுச்ரூஷையும் செய்யலாம்,

      பசுவிற்கு பணிவிடை செய்ததால்தான் வெகு நாட்களாக குழந்தை இல்லாதிருந்த திலீபன் ஸுதக்ஷிணை தம்பதிகளுக்கு நல்ல புத்ரன் பிறந்தான் என்கிறார் காளிதாஸர்,

      எங்கு பசுக்கள் பக்தியுடன் பராமரிக்கப்படுகிறதோ அங்கு மஹாலக்ஷ்மி உள்பட அனைத்து தேவதைகளும் ஸான்னித்யமாக இருப்பார்கள், மங்களமும் ஆரோக்யமும் ஏற்படும்,

      ஆகவே ஆங்காங்கே பால் (கறவை) நின்ற வயதான பசுக்கள் துன்புறுத்துவது நிறுத்தப்பட்டு, பசுக்களின் மஹிமைகளை தெரிந்து கொண்டு பசுவை கோமாதாவை பாதுகாத்து பூஜித்து தேசத்துக்கும் மனித ஸமூகத்துக்கும் நன்மையைச் செய்ய ஸ்ரீ பகவான் அனுகிரஹிக்கட்டும்.

      Saturday, January 15, 2011

      ஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)

      பாரதப்பசுக்களில் பல நிறங்கள் உண்டு. அவற்றின் தனித்தன்மைகள் அளப்பறியவை. இன்று சர்க்காரின் பசு அழிப்பி - அதன் மூலம்விவசாய அழிப்பு சதித்திட்டத்தால்பல வர்ணங்களும் அழிந்து, கலந்து வருகின்றன.

      கோ ஸம்ரக்ஷன ஶாஸ்த்ரம் எனும் நூலிலிருந்து (பாசூர் மடம்):
       சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமுனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன. 

       இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

      இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. 

      அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பசுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர்.

      கொங்கப் பசுக்களில் எண்வர்ணங்கள்:


      MyFreeCopyright.com Registered & Protected 


      நந்தை (கபிலநிறம் - கபிலகோ):
      கொங்கத்தில் இந்நிறத்துக்குச் செம்பூத் காரி என்று பெயர். செம்பூத் பறவை உடலின் கரிய நிறத்தில் (சிவப்படித்தாற்போல்) இருக்கும். குறா 

      நன்றி: யுவசெந்தில்குமார் ராமலிங்கம், சாமிநாதபுரம்.

      சுபத்திரை (கருநிறம் - க்ருஷ்ணகோ):
      இந்நிறத்திற்கு "அட்டக்காரி" என்று பெயர். முழுக்கருப்பு நிறம்.

      ஒரு காரி மாடு

      சுரபி (வெண்ணிறம் - ஶ்வேதகோ):
      வெள்ளைப் பசு என்பது பொதுப்பெயர்.

      வெள்ளை மாடுகள்
      சுசீலை (புகைநிறம் - தூம்ரகோ):
      இந்நிறத்திற்கு மயிலை என்று பெயர்.

      மயிலை விறதல்
      சுமுனை (செந்நிறம் - ரக்தகோ):
      இது ரத்தச்செவலை அல்லது சம்பூத் செவலை எனப்படுவது.

      செம்பூத் செவலைக்கும் (இடது), இளஞ்செவலை (தாம்ரகோ) க்கும் (இடது) வித்தியாசம்.

      பிற வண்ணங்கள்:
      இளஞ்செவலை (இளஞ்செவலை):
      இது ரத்தச்செவலையைவிட குறைவான செவலையாக இருக்கும். செம்பு நிறம், தாம்ரகோ என பஞ்சகவ்ய ஆயுர்வேதம் கூறுகிறது. (பார்க்க: மேல் படம்). இளஞ்செவலையே மிக வெளுப்பாக இருந்தால் "சந்தனப் பிள்ளை" எனப்படும்

       இளஞ்செவலை பசுவும் கன்றும்

      பிள்ளை (பித்தளகோ):
      இது இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். பித்தம் என்றால் மஞ்சள் என்று பொருள். பித்தளம் என்றால் மஞ்சள் (பித்தளை நிறம்) என்று பொருள்.

      பிள்ளைக் காளை
      Albino:
      இப்பசுக்கள் முழுவெள்ளையாக இருக்கும். சூட்டு மயிர், வால் குஞ்சம், கால் தாரை என அனைத்தும் வெள்ளையாக இருக்கும். மூக்கும் வெளுத்திருக்கும். குறா என்று பெயர்.




      புலிச்சேரை: 
      புலிக்கோடுகள் போல இருக்கும். தற்பொழுது சங்கராண்டாம்பாளயம் பட்டக்காரர் தொழுவத்தில் மட்டுமே உள்ளது.

            புலிச்சேரை எருது



      காப்புரிமை செய்யப்பட்ட ஆய்வு. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

      கொங்க பசுக்களின் நிறங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிய 91 - 424 - 2274700 அல்லது ஈமெய்ல் PONDHEEPANKAR@GMAIL.COM

      பொன் தீபங்கர் 
      கொங்கதேச சரித்திர கலாசார   கேந்திரம்