Saturday, January 15, 2011

ஐவர்ணப்பசுக்கள் - பிறவர்ணங்கள்: (கட்டுரையாசிரியரின் காப்புரிமை)

பாரதப்பசுக்களில் பல நிறங்கள் உண்டு. அவற்றின் தனித்தன்மைகள் அளப்பறியவை. இன்று சர்க்காரின் பசு அழிப்பி - அதன் மூலம்விவசாய அழிப்பு சதித்திட்டத்தால்பல வர்ணங்களும் அழிந்து, கலந்து வருகின்றன.

கோ ஸம்ரக்ஷன ஶாஸ்த்ரம் எனும் நூலிலிருந்து (பாசூர் மடம்):
 சிவலோகத்திலே சிவனது சந்நிதியில் இடபம் இருக்கும். அதன் பக்கத்திலே நந்தை, சுபத்திரை, சுரபி, சுசீலை, சுமுனை என்னும் ஐவகைப் பசுக்கள் இருக்கும். இவை முறையே, கபிலநிறமும், கருநிறமும், வெண்ணிறமும், புகைநிறமும், செந்நிறமும் உடையனவாம். இவ்வைந்தும், சிவனது திருவருளினாலே திருப்பாற்கடலில் இருந்து, சிவபூசையின் பொருட்டும், யாகாதிகமருங்களின் பொருட்டும் பூமியில் உற்பவித்தன. 

 இப்பசுவின் உறுப்புக்களிலே தேவர்களும் முனிவர்களும் தீர்த்தங்களும் இருக்குமாறு கூறுதும். பிரமாவும் விட்டுணுவும் கொம்பினடியில் இருப்பர்; கோதாவரி முதலிய தீர்த்தங்களும் சராசரங்களும் கொம்பின் நுனியில் இருக்கும்; சிவன் சிரத்திலும், உமாதேவி நடுநெற்றியிலும், முருகக் கடவுள் மேல் நாசியிலும், நாகேசர் உள் நாசியிலும், அச்சுவினிதேவர் இரண்டு காதுகளிலும், சூரியனும் சந்திரனும் இரண்டு கண்களிலும், வாயு பல்லிலும், வருணன் நாவிலும், சரஸ்வதி ஊங்காரத்திலும், இயமன் இருதயத்திலும், இயக்கர்கள் கெண்டைத் தலத்திலும், உதயாஸ்தமயன சந்திகள் உதட்டிலும், இந்திரன் கழுத்திலும், அருக்கர்கள் திமிலிலும், சாத்தியர் மார்பிலும், அனிலவாயு நான்கு கால்களிலும், மருத்துவர் முழந்தாள்களிலும், நாகலோகத்தார் குரத்தின் நுனியிலும், கந்தருவர் குரத்தின் நடுவிலும், தேவ மாதர்கள் மேற்குரத்திலும்; உருத்திரர் முதுகிலும், வசுக்கள் சந்திகளிலும், பிதிர்கள் அரைப்பலகையிலும், சத்தமாதர்கள் பசுத்திலும், இலக்குமி அபானத்திலும், நாகேசர் அடிவாலிலும் இருப்பர், சூரியனொளி வால் மயிரிலும், கங்கை மூத்திரத்திலும், யமுனை சாணத்திலும் இருக்கும், முனிவர்கள் உரோமத்திலும், பூமிதேவி உதரத்திலும் இருப்பர்; சமுத்திரம் முலையிலும், காருகபத்தியம் முதலிய அக்கினி மூன்றும் முறையே வயிறு இருதயம் முகம் என்னும் உறுப்புக்களிலும், யாகங்களெல்லாம் எலும்பிலும் சுக்கிலத்திலும் இருக்கும்; கற்புடைமகளிர் எல்லா அவயவங்களிலும் இருப்பர்.

இத்துணைச் சிறப்பினவாகிய பசுக்களை இயக்குங்கால், சிறிதும் வருத்தம் செய்யாமல், இரக்கத்தோடும் பலாசங்கோலினாலே மெல்ல ஓங்கி, போ போ என்று இயக்குக. இரக்கமின்றிக் கோபித்து அதட்டி அடிப்போர் நரகத்து வீழ்வர். பசுக்களின் பெருமையை உணர்ந்து, அவைகளை வலஞ்செய்து, துதித்து வணங்கி, புல்லுக்கொடுத்தோர் சிவலோகத்தை அடைந்து இன்புறுவர். பசுக்களைத்தீண்டினும், தீவினைகள் நீங்கி, நல்வினைகள் பெருகும். அவைகள் இம்மை மறுமை இரண்டிலும் பயனைத் தரும். பசுக்களுக்குச் சாலையை விதிப்படி செய்வித்து, ஆற்றுமண் ஓடைமண் புற்றுமண் வில்வத்தடிமண் அரசடிமண் என்பவைகளால் நிலம்படுத்து, முதிர்கன்று இளங்கன்று நோயுற்றகன்று என்னும் இவைகளுக்கு இடங்கள் வெவ்வேறாக அமைக்க, நாடோறும் கோசல கோமயங்களைப் புறத்தே நீக்கி, சுத்தி செய்க. மசகம் வராமல் தூபம் இடுக, தீபங்கள் ஏற்றுக சாலை எங்கும் பூமாலை நாற்றுக. பசுக்களை, சாலையினுள்ளே சுவத்தி என்னும் சொல்லைச் சொல்லி, மெல்ல மெல்லப் புகுவித்து, சிரத்தையோடும் புல்லைக் கொடுக்க, நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் அமைத்து, மருந்து கொடுத்துப் பேணுக. 

அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தூபதீபம் காட்டி வணங்குக. பசுக்களை வேனிற்காலத்திலே சோலைகளிலும், மழைக்காலத்திலே மலைச்சாரல் வனங்களிலும், பனிக்காலத்திலே வெய்யில் மிகுந்த வெளிகளிலும், இடர் உறாவண்ணம் மேய்க்க, பசுக்களை இடர் நீங்கக் காக்காதவர்களும், பூசை செய்யாதவர்களும், காக்காத பாவிகளைத் தண்டியாத அரசனும் நரகத்தில் வீழ்வர்கள். ஆவுரிஞ்சுகல் நாட்டுதலும், சிவனுக்கும் ஆசாரியருக்கும், பசுவைத் தானம் செய்தலும், குற்றமற்ற இலக்கணங்களையுடைய இடபத்தைச் சிவசந்நிதிக்குத் தானம் செய்தலும், சிவனது திருப்பணியின் பொருட்டுச் சகடத்திற்கு எருது கொடுத்தலும், இளைத்த பசுவைக் கண்டி இரங்கித் தாம் வாங்கி வளர்த்தலும், பெரும் புண்ணியங்களாம். பசுக்கள் தரும் பால் தயிர் நெய் கோசலம் கோமயம் என்னும் பஞ்சகவ்வியங்களையும் சிவனுக்கு அபிஷேகம் பண்ணுவிக்க. கன்று பால் உண்டு முலையை விடுத்தபோது, ஜலத்தினாலே முலையைக் கழுவிக் கறக்க. ஆசை மிகுதியினாலே கன்றுக்குப் பால்விடாமற் கறந்தவன் நரகத்தில் வீழ்ந்து நெடுங்காலம் வருந்தி, பின்பு பூமியிலே பிறந்து, கடும்பசியினாலே வீடுகள் தோறும் இரப்பன். கபிலையின் பாலைச் சிவனுக்கே கொடுக்க; அதனைத் தாம் பருகில் நரகத்து வீழ்வர். மலட்டுப்பசுவின் மேலேனும் இடபத்தின் மேலேனும், பாரம் ஏற்றினோரும், இடபத்தில் ஏறினோரும் நரகத்தில் வீழ்வர். பசுக்களைப் பகைவர் கவரின், எதிர்த்து காக்க; காத்தல் அரிதாயவழித் தம்முயிர் விடுத்தோர் சிவபதம் அடைவர்.

கொங்கப் பசுக்களில் எண்வர்ணங்கள்:


MyFreeCopyright.com Registered & Protected 


நந்தை (கபிலநிறம் - கபிலகோ):
கொங்கத்தில் இந்நிறத்துக்குச் செம்பூத் காரி என்று பெயர். செம்பூத் பறவை உடலின் கரிய நிறத்தில் (சிவப்படித்தாற்போல்) இருக்கும். குறா 

நன்றி: யுவசெந்தில்குமார் ராமலிங்கம், சாமிநாதபுரம்.

சுபத்திரை (கருநிறம் - க்ருஷ்ணகோ):
இந்நிறத்திற்கு "அட்டக்காரி" என்று பெயர். முழுக்கருப்பு நிறம்.

ஒரு காரி மாடு

சுரபி (வெண்ணிறம் - ஶ்வேதகோ):
வெள்ளைப் பசு என்பது பொதுப்பெயர்.

வெள்ளை மாடுகள்
சுசீலை (புகைநிறம் - தூம்ரகோ):
இந்நிறத்திற்கு மயிலை என்று பெயர்.

மயிலை விறதல்
சுமுனை (செந்நிறம் - ரக்தகோ):
இது ரத்தச்செவலை அல்லது சம்பூத் செவலை எனப்படுவது.

செம்பூத் செவலைக்கும் (இடது), இளஞ்செவலை (தாம்ரகோ) க்கும் (இடது) வித்தியாசம்.

பிற வண்ணங்கள்:
இளஞ்செவலை (இளஞ்செவலை):
இது ரத்தச்செவலையைவிட குறைவான செவலையாக இருக்கும். செம்பு நிறம், தாம்ரகோ என பஞ்சகவ்ய ஆயுர்வேதம் கூறுகிறது. (பார்க்க: மேல் படம்). இளஞ்செவலையே மிக வெளுப்பாக இருந்தால் "சந்தனப் பிள்ளை" எனப்படும்

 இளஞ்செவலை பசுவும் கன்றும்

பிள்ளை (பித்தளகோ):
இது இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். பித்தம் என்றால் மஞ்சள் என்று பொருள். பித்தளம் என்றால் மஞ்சள் (பித்தளை நிறம்) என்று பொருள்.

பிள்ளைக் காளை
Albino:
இப்பசுக்கள் முழுவெள்ளையாக இருக்கும். சூட்டு மயிர், வால் குஞ்சம், கால் தாரை என அனைத்தும் வெள்ளையாக இருக்கும். மூக்கும் வெளுத்திருக்கும். குறா என்று பெயர்.




புலிச்சேரை: 
புலிக்கோடுகள் போல இருக்கும். தற்பொழுது சங்கராண்டாம்பாளயம் பட்டக்காரர் தொழுவத்தில் மட்டுமே உள்ளது.

      புலிச்சேரை எருது



காப்புரிமை செய்யப்பட்ட ஆய்வு. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். 

கொங்க பசுக்களின் நிறங்கள் மேலே கூறப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி மேலும் அறிய 91 - 424 - 2274700 அல்லது ஈமெய்ல் PONDHEEPANKAR@GMAIL.COM

பொன் தீபங்கர் 
கொங்கதேச சரித்திர கலாசார   கேந்திரம்

10 comments:

Unknown said...

Very nice blog with lot of information and links.Good effort on preserving native cows and beneficial effects on humans and nature.Thank you.
Provide e-mail address for exchange of views and information about native cows .

mani said...

Sir, my hearty congratulations to you for creating this blog...
Our people are not understanding the
importance,
pride,
wealth
Majesty
Taste
of our native species (cows, goats, buffalo, poultry).....

Sir the west is crazy for our milk (rich in A2), brazil is ready to pay crores to import our native bulls but fucking Indian government doesnt understand this......

kvv said...

super information i have always been a fan of the native breeds simply loved all the information of coat colour in native cattle breeds.

kvv said...

super information provide us with more of this wonderful things. always been a fan of native breeds

Sara Durai said...

சங்கராண்டம்பாலையம் பட்டைகாரரிடம் இப்போ ஒரு புலிசாரை பசுமாடு இருக்கு..

Ramesh said...

Very good information about our cows and their. Now i am able to recollect all my childhood memories when my grandfather and their friends talk about the all these words to represent cows.

Very good info.I really appreciate all the works and willing to help in anyways that I can.

M EZHILVANNAN said...

Very good information about our variety of cows...thanks for your information...🙏🙏🙏

Nagulsubramonian said...

ஜி குறா மாடு என்றால் என்ன

Nagulsubramonian said...

ஜி குறா மாடு என்றால் என்ன

PONDHEEPANKAR said...

முழுசா படிங்க