Tuesday, January 25, 2011

தமிழக பசுவினங்கள்


ஆதி ஆயன் ஆஇனன்குடி  தண்டாயுதபாணிக்கு சமர்ப்பணம்  


நாட்டுமாடு,டா.சுப்பிரமணியன் சுவாமிக்கு
ஜல்லிக்கட்டு,நாட்டுமாடுகளை தேசிய விலங்காக அறி விப்பது குறித்து நான் வழங்கி வெற்றி பெற்றவை: 
http://tamilnaducattle.blogspot.in/2013/10/speech-for-urban-audience-at-iyal.html

தமிழகத்தின் ஆவினங்கள்

பண்டைய தமிழகம் ஐந்து சீதோஷன - சனத்திரள் - இயற்கைப்பிரிவுகளாகப் (socio - climatic - physical - agricultural)  பிரிந்திருந்தது. இதனையே "தமிழ்நாடு ஐந்து" என்று புறநானூறு பகர்கிறது. இதற்கு எல்லைகளாக
சேரதேசம் அல்லது கொங்கதேசம் -
வடக்குமலைத்தொடர்:  நீலகிரி - திரிகடம்பி - தலைமலை - பெரும்பாலை, 
மேற்கெல்லை: வெள்ளியங்கிரி - வாழையாறு - ஆனைமலை,
கிழக்கெல்லை: ஏற்காடு மலை - கொல்லிமலை - மதிற்கரை - கடம்பூர்மலை - சிறுமலை,
தெற்குமலைத்தொடர்: சிறுமலை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - ஆனைமலை,

சோழதேசம் அல்லது சோழியதேசம் -
வடக்கெல்லை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - மதிற்கரை
தெற்கெல்லை - பிரான்மலை - தென்வெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்

பாண்டியதேசம் அல்லது பாண்டிதேசம் -
வடக்கெல்லை - பன்றிமலை (கொடைக்கானல் - பொதிகை) - சிறுமலை - பிரான்மலை - வடவெள்ளாறு
மேற்கெல்லை - பெருவழி - தென்பொதிகை - திண்டுக்கல் - காரைக்காடு (திண்டுக்கல் - நத்தம் எல்லை)
கிழக்கெல்லை - சேது (கடல்)
தெற்கெல்லை - குமரி (கடல்)

திரவிடதேசம் அல்லது தொண்டைநாடு -
வடக்கெல்லை - வேங்கடம் - சுவர்ணமுகிநதி
மேற்கெல்லை - பவளமலை (கிருஷ்ணகிரி மலைத்தொடர்)
தெற்கெல்லை - தென்பெண்ணை
கிழக்கெல்லை - கடல்

நடுநாடு -
வடக்கெல்லை - தென்பெண்ணை
மேற்கெல்லை - ஏற்காடு - கொல்லிமலைத்தொடர்
தெற்கெல்லை - வடவெள்ளாறு
கிழக்கெல்லை - கடல்

இதன் பூர்வகுடிமக்களுக்கு கொங்கர், சோழியர், பாண்டியர், தொண்டைனாடர் என்று பெயர். நடுநாடு என்பது பெரும்பாலும் சோழநாட்டுடனேயே சேர்த்துக் குறிப்பிடப்படுகிறது. ஒவ்வொரு இனத்திரளும் தனக்கான தனிப்பண்பாடு, இயற்றமிழ், வாழ்க்கைமுறை ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வகையான மாட்டினம் உள்ளது. பிறபகுதிளுக்கு எடுத்துச்சென்றால் தன்மை குறையுமளவு அவ்வாப்பகுதிகளுக்கேற்ற அமைப்பிலுள்ளன.

தமிழ்நாடு ஐந்ததனில் பசுவினங்கள்:
1. சேரதேசம் - மீகொங்கமாடு (மேகரை மாடு அல்லது காங்கயம் மாடு)  : சாமானியர்களால் இவ்வகை "கொங்கன்" என்றும் கன்னடத்தில் "கங்கநாடு" என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இத்தேசத்துள் இருபத்திநாலு நாட்டுப்பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றான காங்கயநாட்டில் உருவாகும் ஆவினங்களே காங்கயம் என்று அழைக்கப்படுகின்றன. இவை இன்றைய சத்தியமங்கலம், கோபி, பெருந்துறை, பவானி, ஈரோடு, திருப்பூர், கோவை, பல்லடம், அவினாசி, பொள்ளாச்சி, காங்கயம், தாராபுரம், பழனி, ஒட்டன்சத்திரம், வேடசந்தூர், திண்டுக்கல், அரவக்குறிச்சி, கரூர் ஆகிய காவேரியாற்றிற்கு மேற்குப்பகுதியில் தாலுகாக்களில் உள்ள இயற்கை சூழ்நிலையில் நன்றாக விருத்தி அடைகின்றன. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது, அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது. பழையகோட்டை பட்டக்காரர் அதிகாரப்பூர்வ இணையதளம்:  http://kangayambull.org/









                         
  காங்கயம் எருது






2.சேரதேசம் - மழகொங்கமாடு (கீகரை மாடு அல்லது திருச்செங்கொடு மாடு): இவ்வகை கொங்கத்தின் கீழ்ப்புறம் அதிகமுள்ளன - உருவத்தில் மேகாட்டு மாடுகளைப் போலவே ஆனால் சிறிதாக இருக்குமாயினும் மேற்கத்தி இனத்தைவிட பால்வளமும் பஞ்சம் தாங்கும் தன்மையும் அதிகமுடையவை - இன்று கேரளாவுக்கு அன்றாடம் பத்து வண்டிகள் செல்வதால் மிக அருகிவிட்டன. செயற்கை விந்து செலுத்தல் மூலம் காங்கயம் விந்து செலுத்தப்பட்டு வருவதாலும் சுத்தத்தன்மை குறைந்துவிட்டது. மேச்சேரி, ஓமலூர், நங்கவல்லி, சேலம், சங்ககிரி, ஆத்தூர், கங்கவல்லி, ராசிபுரம், நாமக்கல், காட்டுப்புத்தூர், பரமத்தி வேலூர், திருச்செங்கோடு ஆகிய காவேரிக்கு கிழக்குப்பகுதியே இதன் இயல் சூழ்நிலை. கொங்கு வெள்ளாள கவுண்டர்களால் விருத்தியானது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது. பழையகோட்டை பட்டக்காரர் அதிகாரப்பூர்வ இணையதளம்:  http://kangayambull.org/





கீகரை கொங்கமாட்டு (திருச்செங்கோடு பசுக்கள்)
தென் பாரத கால்நடைகள் புத்தகத்திலிருந்து:


3. சேரதேசம் - செம்மரை மாடு (மலையன் அல்லது அல்லது பர்கூர்): இவ்வகை அந்தியூர் மலைப்பகுதியில் உள்ளவை, சிகப்பு - வெள்ளை நிறம் கலந்து இருக்கும். இதற்கு மேற்கில் கர்னட பூரணய்யா மாடுகளை ஒத்த ஆனால் உருவத்தில் சிறிதான ஒரு இனம் உள்ளது. ஒட்டத்தில் சிறந்தது ஆயினும் அடம் பிடிக்கும். மலைப்பகுதி கன்னட லிங்காயத்துகளால் (லிங்கங்கட்டி) பேணப்படுகிறது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


                        


  பர்கூர் காளை 












4. சேரதேசம் - பாலமலை மாடு:  சேலம் ஜில்லா மேட்டூர் தாலுகாவிலும்  அருகில் ஈரோடு ஜில்லா பவானி தாலுகா பாலமலையில் மலையாள கவுண்டர்களாலும் (மலை ஜாதி), கிழே சில கொங்க வெள்ளாளர்களும் வளர்கின்றனர். ஆலாம்பாடி மற்றும் பர்கூருடன் குழப்பிக்கொள்ளபபடுவது. கிட்டத்தட்ட அழிந்து விட்டது.
                                                                          பாலமலை மாடு 
















5. சேரதேசம் - மராட்டியான் மாடு, ஆலாம்பாடி, லம்பாடி: மேட்டூர், பெண்ணாகரம், தர்மபுரி, கொள்ளேகாலம், பெங்களூர், பவானி ஆகிய தாலுக்காக்களில் உற்பத்தியாகிறது. இது சவாரி வண்டிகளுக்கு ஏற்றது. மராட்டி, லம்பாடி இனத்தவரால் பொதி மாடுகளாக வளர்க்கப்பட்டது. கொங்கு வெள்ளாள கவுண்டர்கள், லிங்காயத்துகள், வன்னியர், வொக்கிலியரால் பேணப்படுகிறது.

                      ஆலாம்பாடி காளை

    ஆலாம்பாடி பசுக்கள் (கருப்பாக உள்ளவை) 


6. சேரதேசம் - கொல்லிமலை மாடுகள்:
யாவி கொல்லி, சேரவராயன், பச்சைமலை கல்வராயன் மலைகளில் காணலாம் கொங்கமாடுகளின் குட்டை வடிவம் போல இருக்கும் இவை நோய் எதிர்ப்பு சக்தியும் இலையுதிரா காடுகளின் சுழ்நிலைக்கு ஏற்றவை ஆதலால் இப்பகுதி பூர்வீகர்களான மலையாளிகளால் வளர்க்கப்படுபவை. 






































கொல்லிமலை 

7. சோழதேசம் - வடகரை மாடுகள் - இவை உருவத்தில் பருத்தும், குள்ளமாகவும், கொம்புகள் சிறிதாகவும் இருக்கும். அப்பகுதி பிள்ளைமார் ஆகியோரால் பேணப்படுகிறது.


                       சோழிய வடகரை பசுக்கள்

8. சோழதேசம் - கோநாடன் (மணப்பாறை) - கிருஷ்ணராயபுரம், குளித்தலை, மணப்பாறை, திருச்சி, துவரங்குறிச்சி ஆகிய இடங்களில் பிரசித்தம். சோழிய வெள்ளாள பிள்ளைமார் சமூகத்தினர் பெருமளவு வளர்க்கின்றனர். அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.



                     மணப்பாறை பசுக்கள்

9. சோழதேசம் - மொட்டை மாடு (உம்பளச்சேரி) - இவை கொம்புகள் சுடப்பட்டும், கால் காய்க்கப்பட்டும் காணப்படும் - சேற்றுழவுக்கு சிறந்தவை - தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை காவேரி பாசனப்பகுதியில் பெருமளவு உள்ளன. சோழிய வெள்ளாள பிள்ளைமார், சோழிய பிராமணர்கள், தஞ்சைக்கள்ளர் ஆகியோர் இவ்வினத்தைப் பேணுகின்றனர்.

      

 உம்பளச்சேரி பொலிகாளை















10. பாண்டிதேசம்   - (இருச்சாளி) - சிவகங்கை மாவட்டத்திலுள்ள காட்டுப்பகுதியில் காணப்படுகிறது. இப்பொழுது மிக மிக குறுகி அருகிவிட்டது. இதுபோன்றே குருச்சாளி என்ற இனமும் உண்டென்கின்றனர்.





















11. பாண்டிதேசம் - சல்லிக்கட்டு (புலிக்குளம்) - ஒருகாலத்தில் நிலக்கோட்டை, நத்தம், மதுரை, தேனி, பெரியகுளம், சிவகங்கை, ராமநாடு ஆகிய பகுதிகளில் பெருமளவு இருந்தது. இப்பொழுது தேனி பள்ளத்தாக்கில் மட்டுமே பெருமளவு உள்ளது. பல்வேறு இனங்கள் வைத்திருப்ப்பினும், கோனார் இனத்தவரே பிரதானமாக விரும்பி வளர்க்கின்றனர்.
புலிக்குள மாட்டு  மந்தை 




  
                 

 புலிக்குளம்  காளைகள்








       புலிக்குளம் கன்றுகள்









12.பாண்டிதேசம் - தம்பிரான்மாடு (காப்பிலியர் மாடு) - கன்னடம் பேசும் காப்பிலிய கவுண்டர்கள்களால் வளர்க்கப்படுவது. தேனி ஜில்லா பகுதி. "தேவரு ஆவு" என்றும் அழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அழிவு நிலையில் உள்ளது. அவர்கள் சரித்திரம் வாழ்வியலோடு பிண்ணிப் பிணைந்தது.


13. பாண்டிதேசம் - தென்பாண்டி (திருநெல்வேலி) - விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி தாலுகாக்களிலுள்ள வனப்பகுதிகளில் உள்ளவை. அப்பகுதி வாழ்வியலுக்கு உகந்தவை. நாடார்கள், முக்குலத்தோர் வளர்க்கின்றனர்.


 
14. திரவிடதேசம் (தொண்டைநாடு) - திருவண்ணாமலை - சித்தூர், வேலூர், செங்கல்பட்டு, சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம் பகுதியினவை. செவலை, புள்ளி, வெள்ளை, கருப்பு ஆகிய பலநிறங்களுடையவை. தொண்டை மண்டல வெள்ளாளர்கள், வன்னியர்கள் விரும்பி வளர்க்கின்றனர்.





                திருவண்ணாமலை

                                         ரமண மகரிஷியின் அன்புக்குறிய லக்ஷ்மி

15. திரவிடதேசம்(தொண்டைநாடு) - துரிஞ்சித்தழை மாடு - பஞ்சம் தாங்குவதில் சிறந்தது. ஊஞ்சல் (உசிலை) தழைகளை மட்டுமே உண்ணும்.  தெலுங்கு கொல்லர் எனும் மேய்ப்பர்களது மாடு. நூறு மட்டுமே உள்ளன.



         



 துரிஞ்சிதழை மாடு 































16. திரவிடதேசம்(தொண்டைநாடு) - புங்கனூர் குட்டை- இவை சித்தூர் மாவட்டத்தில் ஒருகாலத்தில் பரவலாக வீட்டில் நாய்க்குட்டிபோல் வளர்க்கப்பட்டு வந்தன. பாலில் சிறந்தவை.













                                                 

 புங்கனூர்மாடு
 


   புங்கனூர் காளை

17. நடுநாடு - மொட்டை - நாட்டான் - இவை பெரம்பலூர் மொட்டை இனத்தாஇ ஒத்தவை.

இவை மட்டுமல்லாது இன்னும் பலநூறு இனங்கள் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. கட்டுரை மேலும் விரியும்.


கட்டுரை ஆசிரியர் தொடர்பு:
பொன் தீபங்கர் 
கொங்கதேச சரித்திர கலாசார   கேந்திரம்

Phone:  91- 424 - 2274700

26 comments:

தமிழ்முருகன் said...

A nice article. Thank you for sharing the research done.

திருமேனி said...

மிக அருமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டுரைகள்.

தொடர்ந்து பல ஆராய்ச்சி கட்டுரைகள் படைக்க ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Kathiravan said...

Nice to see more information on the cattle. Good collection of photos. Excellent work

Mega said...

Great work!

Piththa_ Piraisoodi said...

please view the details on panchagavya in my blog

Unknown said...

GREAT WORK I WANT MORE IMFOREMATION

Unknown said...

nice...

Unknown said...

ஐயா, மிகவும் நன்றி..நான் இதை நீன்ட நாட்களாக தேடிக்கொன்டிருந்தேன்

Unknown said...

ஐயா, மிகவும் நன்றி..நான் இதை நீன்ட நாட்களாக தேடிக்கொன்டிருந்தேன்

Unknown said...

Great Work ... no words to explain

kirupa hacker said...

You are great and saving the future generation of cows and the people who drink the cow milk

Unknown said...

very beautiful job that you done here , nowadays people are like to keep their pets like fancy or imported dogs etc... they spending a huge amount for keeping that breeds . here you posted very nice cattle breeds , after watched your blog the people may interest to at least one breed in their farm house ....
i request you to please upload some more details about like that behavior, habit,milk production , etc ...
i wish you to get always lord muruga's blessing to you....
thanks a lot

Unknown said...

ungalathu sevaiky naan thalaivanangukiren

Unknown said...

This cow so very nice

செல்வமாமணி மா said...

அருமையான தொகுப்பு நம் நாட்டு பசுக்களை ஒன்றாக அல்லது பெரும்பான்மை வகைகளை ஓரிடத்தில் அல்லது குறிப்பிட்ட மண்டலங்களில் வளர்ப்பிப்பதற்கான சாத்தியக் கூறுகளை யாராவது வழங்கினால் நல்லதாகும்

Unknown said...

சூப்பர் தகவல்


















Unknown said...

Nice

Vinoth Kanna said...

வடகரை மாட்டினை பற்றிய தகவல்களை தாருங்கள்....

nandhkumar said...

தொண்டை மாடுகள் பற்றி எழுதிய ஐயா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
#தொண்டைமாடுகள்காப்போம்

Unknown said...

Very nice

Unknown said...

good, ungal ulaipai potra varthaikale illai irupikum mikka nantri

Unknown said...

பசுக்களின் வகைகளை மீட்டு கூறியமைக்கு மிக்க நன்றிகள்

Unknown said...

Thanks sir.

Unknown said...

வடகத்திபூரனி மற்றும் தேனி மலை இனங்களையும் இனைக்கவும்

Unknown said...

பாண்டிய தேசம்: திருநெல்வேலி, விருதுநகர்,தூத்துக்குடி பகுதி மாடுகள் பெயர் சொல்லுங்கள். அதை நீங்கள் குறிப்பிடவில்லை.

Hotel Applettree Luxury 3 Star Hotels in Tirunelveli said...

Nice Post